Skip to playerSkip to main contentSkip to footer
  • 12 years ago
Jebathai Ketkum - ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் .
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காண செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஊக்கத்துடனே ஒர்முகமாய்
வாக்குதத்தை பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மை ஆக்கி
கேக்கும்படி கிருபை செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகனதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடு வேண்டி கொள்ளும்.

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கி விடும்.
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

Category

🎵
Music

Recommended

47:00
Up next