Skip to playerSkip to main content
  • 13 years ago
நான், எனது என்று சுயநலமாக இருக்கும் சமூகத்தில் விழியில்லாதவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் ஜின்னா.

1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் பிறந்தவர் ஜின்னா. தனது 13-வது வயதில் எதிர்பாராத விதமாக பார்வையை இழந்த ஜின்னா, 18 வயது வரை பார்வையை திரும்பப்பெறும் சிகிச்சைகளிலேயே கழித்துள்ளார். அத்தனை முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

தாய், தந்தை இல்லாமல், தாய் மாமன் அரவணைப்பில் வளர்ந்த ஜின்னா, தனது 18-வது வயதில் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் சேர்ந்து தடைபட்ட படிப்பை முடித்தார்.

கல்வியின் மீது ஜின்னாவுக்கு இருந்த ஆர்வமும், தான் பட்ட கஷ்டத்தை மற்ற பார்வையற்றோர் படக்கூடாது என்கிற எண்ணமும், அவரை பார்வையற்றோருக்கான அமைப்பை உருவாக்கத் தூண்டியுள்ளது.

பார்வையற்றோருக்கு முதலில் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜின்னா, உரிய கல்வி கிடைத்தாலும் வேலைவாய்ப்பு என்பது பார்வையற்றோருக்கு கேள்விக்குறியாகவே இருந்ததை உணர்ந்தார். அதன் விளைவாக, இன்று கணிணிப் பயிற்சி, கால்சென்டர் பயிற்சி என வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் 17 வகையான பயிற்சிகளை அளித்து வருகிறார்.
Be the first to comment
Add your comment

Recommended