தடை செய்யப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு பதிலாக வெற்றிகரமாக நடைபெற்ற உள்ளரங்க நிகழ்ச்சி.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் இனவாதிகளுக்கு எதிராக கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டத்தை அரசாங்கம் தற்காலி தடைவிதித்ததைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சி கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து பயன் பெற்றார்கள். பொதுக் கூட்டம் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்களுடன் கூடிய செய்திகளை ஜமாத்தின் தளத்தில் விரைவில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்
Be the first to comment