குருசாமி குத்தூசி குருசாமியான கதை! _ The Legend _ Ananda Vikatan

  • 2 years ago
#குருசாமி #KuthoosiGurusami #History

This Video is about the Activist Pair Kuthoosi Gurusami and his Wife History.
குத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.
பெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.

CREDITS
Script & Host - Suguna
Camera - SureshKrishna
Edit - Muthu



Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com

Recommended