#BOOMINEWS | சிவகாசியில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டி |

  • 3 years ago
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த வரை, பட்டாசுக்கு தடை விதிக்கப்படவில்லை.
மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி.....

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக, தன் சுத்தம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகாசி எம்எல்ஏ அரசன் அசோகன் தலைமை தாங்கினார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப்பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறும்போது, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது வரை, பட்டாசு விற்பனை செய்வதற்கும், பட்டாசுகள் வெடிப்பதற்கும் தடை இல்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தான் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்திருக்கிறது . டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு காரணமாக, 26 காரணங்கள் இருக்கும் பொழுது, 26 ஆவது காரணமாக இருக்கும் பட்டாசை மட்டும் தடை செய்வது கண்டனத்துக்குரியது. முதல் 6 காரணங்களால் மட்டுமே, டெல்லியில் 90 சதவீதம் மாசு ஏற்படுகிறது. இதனை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மூடி மறைக்கின்றது. பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில், கொரோனா அச்சத்தால் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையையும் கடந்த மார்ச் மாதம் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு ராஜஸ்தானில், பட்டாசு விற்பனைக்கு எந்த தடையும் ஏற்படாத வகையில், நானும் தமிழக அமைச்சர் தங்கம்தென்னரசுவும் இணைந்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெல்லட்டை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். மேலும் அனைத்து மாநிலங்களிலும், சிவகாசி பட்டாசுகள் விற்பனையை ஊக்குவிக்கும்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழியாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் வைக்கப்படும். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நமது நிதியமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து அறிக்கை விட்டுள்ளார். நியாயமாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு கவுன்சில் கூட்டம் நடத்திவிட்டு, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர ஆதரவு இல்லை என்பதைப் போல ஒன்றிய நிதியமைச்சர் பேசிவருகிறார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது என்று கூறினார்.

Recommended