#BOOMINEWS | பள்ளிகள் வரும் 1 ம் தேதி திறப்பு கோவை மாவட்டத்தில் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் |

  • 3 years ago
வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால் மாநிலம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளை வருகிற 1-ந் தேதி முதல் திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் 192 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கள், 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 259 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் புதர்களை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளிகளில் பல மாதங்களாக குடிநீர் தொட்டிகள் பயன்படுத்தப் படாமல் உள்ளது. இதையடுத்து அந்த தொட்டிகளை பணியாளர்கள் சுத்தப்படுத்தி குளோரின் கலந்த தண்ணீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வகுப்பறையில் ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் வீதம் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. கரும்பலகைகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Recommended