புதுப்பேட்டை... தவிர்க்க முடியாத தமிழ் சினிமா...! ஏன்? #11YearsOfPudhupettai

  • 4 years ago
போலீஸ் சினிமாக்களைப்போல தாதா சினிமாக்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வரலாறு உண்டு. 'தளபதி', 'நாயகன்', 'பாட்ஷா', 'கபாலி' (நாளை 'காலா'?) வரை தாதாக்கள் என்பவர்கள் பணக்காரர்களிடமிருந்து கள்ளப்பணத்தைப் பறித்து எளிய மக்களுக்கு உதவுபவர்களாக தாதாக்களைச் சித்திரிக்கும். ஆனால், 2006-ம் ஆண்டில் வெளியான 'ஆச்சார்யா', 'புதுப்பேட்டை', 'டான்சேரா' போன்ற தாதா படங்கள், இப்படி தாதாக்களை நல்லவர்களாகச் சித்திரிக்காமல், 'சமூகத்தில் ரெளடிகள் ஏன் உருவாகிறார்கள்?' என்பது குறித்து விரிவாகப் பேசின.

Recommended