ஏன் பிக்ஸட் டெப்பாசிட் முக்கியம்..?

  • 5 years ago
ஏன் பிக்ஸட் டெப்பாசிட் முக்கியம்..?

இந்தியாவும் சரி, இந்திய மக்களும் சரி எப்போதும் நிரந்தர வருமானத்தை நம்பி மட்டுமே இயங்குவது வழக்கம்.

ஏன் இப்படி..? பிக்ஸட் டெப்பாசிட் ஏன் அவ்வளவு முக்கியம்..? வாங்க பார்ப்போம்.

இன்று பல இளைஞர்கள் பங்கு சந்தை முதலீட்டில் அதிக ஆர்வத்தை காட்டுவது மட்டும் அல்லாமல் மொத்த பணத்தையும் பங்குச்சந்தையிலேயே முதலீடு செய்கின்றனர்.

இது மிகப்பெரிய தவறு என்பதை 3 விஷயங்களை வைத்து சொல்ல முடியும்.


1. பொதுவாக 2 முதலீட்டு திட்டங்கள் உள்ளது. ஒன்று பங்கு சந்தை மற்றொன்று நிரந்த வருமானம் தரும் பிக்ஸட் டெப்பாசிட், பத்திர முதலீடு போன்றவை

2. பங்குசந்தை முதலீட்டில் அதிக அபத்து இருப்பது போல் அதிக லாபமும் உள்ளது, பிக்ஸட் டெப்பாசிட்-இல் ஆபத்து மிக குறைவு என்றாலும் நிலையான உயர்வு கிடைக்கும்.

3. முதலீடு செய்த சில வருடங்களில் இருண்டுமே வளர்ச்சி அடையும். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது, பிக்ஸட் டெப்பாசிட் கணக்கிட்ட தொகை அப்படியே கிடைக்கும். ஆனால் பங்கு முதலீட்டில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு.

இதனால் பங்கு முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்தாலும், ஒரு பகுதி தொகையை பிக்ஸட் டெப்பாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் அவசியம்.

Recommended