எடப்பாடி- பூலாம்பட்டி சாலை போக்குவரத்து துண்டிப்பு- வீடியோ
  • 6 years ago
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிப்பு . பூலாம்பட்டி எடப்பாடி சாலை போக்குவரத்து துண்டிப்பு.



காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடக மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் கபினி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து இந்த இரண்டு அனைவரும் முழு நீரும் உபரி நீராக காவிரியில் திறக்கப்படுகிறது இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அது ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து அனைவரும் முழு நீரும் உபரி நீராக சுரங்க மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது இதனால் சேலம் ஈரோடு மாவட்டம் காவிரிக் கரையோரத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது இதனால் மேட்டூர் பூலாம்பட்டி எடப்பாடி சாலை முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது அங்கு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்டு நிவாரண முகாமில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றங்கரை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Des : Extension of surplus water from Mettur Dam Pollampatti Edapadi road traffic cut off
Recommended