மருத்துவமனையின் ஆண்கள் பிரிவு கழிவறையில் கூலித் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

  • 6 years ago
திருச்செங்கோடு அருகேயுள்ள எலச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி, விவசாய கூலித் தொழிலாளியான இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்கள் பிரிவில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மாலை ஆண்கள் பிரிவு கழிவறையில் மணி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவருடன் யாரும் இல்லாதது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended