காவிரி ஆணையம்: உறுப்பினர்கள் நியமனம் | கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து சிபிஐ மனு- வீடியோ

  • 6 years ago
காவிரி காவிரி ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்களை நியமனம் செய்து அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு இதில் போக்கு காட்டிக்கொண்டே இருந்தது. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது. மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில்தான் கார்த்தி சிதம்பரம் சிக்கியுள்ளார். அந்த நிறுவனம் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது 2007ல் நடந்த முறைகேடு என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Cauvery Management Authority: Karnataka CM Kumaraswamy holds a meeting with officials.


INX media case: CBI moves Supreme Court against bail granted to Karti Chidambaram by Delhi High Court

Recommended