ஆளுநரை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை | 7 years prison for those who interrupt Governor's duty
  • 6 years ago


ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். இது மாநில உரிமைக்கு எதிரான செயல் என திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் ஆய்வு நடத்த வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் பலூன்களையும் வீசினர். இது தொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைதை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டார்.

Rajbhavan release a press release that 7 years prison for those who interrupt Governor's duty. It also says Penalty will be imposed.
Recommended