ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் காவுவாங்கும் காவல்துறை- வீடியோ

  • 6 years ago
ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் வழிப்பறி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல்துறையைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்

திருச்சியில் சந்துக்கு சந்து நின்றுக்கொண்டு ஹெல்மெட் சோதனை என்றபெயரில் கட்டாய பணபறிப்பு மற்றும் வழிப்பறி, ரவுடியிசத்தில் போலீசார் ஈடுபட்டுவருவதாகவும் உய்யங்கொண்டான் வாய்க்கால் பகுதியில் கடந்தமாதம் 11ம்தேதியன்று இரு பட்டதாரி வாலிபர்களை தாக்கியதுடன் பொதுமக்களையும் தாக்கிய ஆய்வாளரைக் கண்டித்தும் திருவெறும்பூரில் அப்பாவி இளம்பெண் சாவுக்குகாரணமான ஆய்வாளரைக் கண்டித்தும் திருச்சியில் மக்கள் சமூகநீதி பேரவை சார்பில் இருசக்கர வாகன கண்டண பேரணி நடைபெற்றது.

உய்யங்கொண்டான் கிராமத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் இருசக்கரவாகனத்தில் காவல்துறையைக் கண்டித்தும் பொதுமக்களை தாக்கும் ஆய்வாளர்கள்மீது வழக்குபதிவுசெய்யவும் வலியுறுத்தி பதாகையினை ஏந்தியும் கண்டண முழக்கமிட்டபடி இருசக்கர பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடத்தில் மனுஅளித்தனர்.

DES : More than 200 people rallied in a two-wheel drive protest against the police in the name of a helmet test

Recommended