மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்- வீடியோ

  • 6 years ago
ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் அமைப்பு உள்பட 10 தொழிற்சங்கங்கள் 2 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ள ஊதியதை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுர்த்தி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

ஆனால் அரசு தரப்பில் ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டது. இது தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்ததால் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று செய்தியார்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 80 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கங்கள் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதனால் மின்சார வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மின்கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் செல்லுத்த வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் போராட்டம் தொடர்ந்தாள் மின் தடை ஏற்படும் அபாய சூழலும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது

Recommended