கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா, எச்.ராஜா மீது புகார்- வீடியோ

  • 6 years ago
கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நித்தியானந்தா மற்றும் எச் ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜாவும் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அவர் மீது போலீஸிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் எனக் கூறி அவரது ஆசிரமத்தை சேர்ந்த சிறுமிகள் கவிஞர் வைரமுத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். மிகவும் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளையும் பேசி அந்த சிறுமிகள் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

Complaint has given to Chennai Police commissioner against H Raja and Nithiyanantha about Vairamuthu issue. H Raja's speech against Vairamuthu is disrupting public peace. In the name of Spirituality, Nithyananda and his disciples, who teach pornography has said in the complant

Recommended