சசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி- வீடியோ

  • 6 years ago

விசாரணை ஆணையம் முன் விருப்பப்பட்டால் நேரில் ஆஜராகலாம் என்றும் இல்லை எனில் வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளதாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் தெரிவித்துள்ளார்.



மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூரன் ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார், அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அதை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் விருப்பபட்டால் விசாரணை ஆணையத்தில் ஆஜராகலாம் என்றும் இல்லை எனில் வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Des : Sasikala's attorney Raja Senthurapantian said that the inquiry commission had said that the lawyer could give explanation if the inquiry was not available before the inquiry.

Recommended