எனக்கு பதவி வேண்டாம்... காவலாக இருக்கின்றேன் - ராகவா லாரன்ஸ்- வீடியோ

  • 6 years ago

தனக்கு எம்..எல்.ஏ. ஆகும் ஆசை இல்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மதுரை வாவட்ட, மாநகர் தலைமை நற்பணி மன்றங்கள் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாள் கொண்டாட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஒன்றிய-நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு என முப்பெரும் விழா அழகர்கோவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் கூறியதாவது,

12 வயதில் இருந்து நான் ரஜினி ரசிகன். மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சியின் பெயர், கொள்கைகள், சின்னம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பிரவேசத்திற்கு மதுரை மிகவும் முக்கியம். அதனால் அவர் மதுரையில் இருந்தே தனது அரசியல் பிரவேசத்தை துவங்குவார் என்று நாங்கள் நினைக்கிறோம்.

ஆன்மீக அரசியல் என்பது எந்த மதத்தையும் முன்னிலைப்படுத்துவது இல்லை. அனைத்து சாதி, மதங்களையும் ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல் ஆகும்.

ரஜினியின் அரசியல் மூலம் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். எனக்கு எம்.எல்.ஏ.வாக ஆகும் ஆசை எல்லாம் கிடையாது. ஆனால் அவரின் காவலராக இருக்க விரும்புகிறேன் என்றார் ராகவா லாரன்ஸ்.


Actor cum dance master Raghava Lawrence has made it clear that he is not interested in MLA post. But he wants to be Rajini's kavalar when he starts a political party.

Recommended