ரோஹித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 392 ரன்கள் குவிப்பு- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது.இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய 112 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக தோற்றது.இந்திய அணியின் தோல்வியின் காரணமாக இலங்கை ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கிறது. இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. குல்தீப் யாதாவிற்கு பதிலாக இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக இருந்தது. தவான் அதிரடியாக ஆடி 68 ரன்கள் எடுத்தார். அதேபோல் இளம் வீரர் ஸ்ரேயேஸ் ஐயர் 88 ரன்கள் எடுத்தார்.

Second one day between India vs Sri lanka held today in Punjab Cricket Association Stadium, Mohali. Rohith Sharma will lead the team as captain. Match will starts at 11.30 AM. Sri Lanka leads the series as 1-0 margin. Sri lanka won the toss and choose bowl. India got 392 runs. Rohith Sharma hits 208 runs in 153 balls which is his 3rd one day 200.

Recommended