உடைந்தது விஷாலின் பாண்டவர் அணி?: நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன்- வீடியோ

  • 6 years ago
நடிகர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பொன்வண்ணன். நடிகர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் பொன்வண்ணன் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் அவர் அளித்துள்ளார்.
அவரின் ராஜினாமாவை ஏற்காமல் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் அரசியல் செயல்பாடு குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணனின் இந்த முடிவை இயக்குனரும், நடிகருமான சேரன் வரவேற்றுள்ளார். முன்னதாக நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் தேசிய கீதம் பாடி பாதியில் கிளம்பியுள்ளார் விஷால். விஷாலின் இந்த நடவடிக்கை யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.



Nadigar Sangam vice president actor Ponvannan has submitted his resignation letter to Sangam chief Nasser. Sangam functionaries are reportedly trying to convince him to stay back.

Recommended