தென் ஆப்பிரிக்கா போனாலும் நான் மாற மாட்டேன்.. கோஹ்லி சூளுரை- வீடியோ

  • 7 years ago
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆக்ரோஷமாகத்தான் பேட் செய்யப்போவதாக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
நாக்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரட்டை சதம் விளாசினார். இந்திய அணி, இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார்.நான் எப்போதும் போலவே பேட் செய்ய விரும்புகிறேன். நல்ல பொஷிஷனுக்கு வந்துவிட்டு, ரன்னை தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பதுதான் எனது பாணி. இதனால் நமது பவுலர்களுக்கு, எதிரணியை மடக்குவதற்கு தேவையான போதிய கால அவகாசம் ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இதேபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறையைத்தான் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பின்பற்றப்போகிறோம்.நூறு அடிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக நான் நினைப்பதில்லை. அதன் பிறகும் பெரிய ஸ்கோராக அதை மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். செஞ்சுரி அடித்ததும் மெத்தனமாக ஆடி அவுட்டானால் பிறகு அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் விழுந்துவிடும். இதை தடுக்க செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேன் தொடர்ந்து களத்திலேயே நிற்க வேண்டும். அவரால்தான், புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்களைவிட எளிதாக பந்துகளை எதிர்கொள்ள முடியும் என்பதால் இது அவசியம்.


Virat Kohli said that his team has to be aggressive in their approach to produce results in their gruelling tour of South Africa up ahead.

Recommended