ரஜினி, கமலுக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன்!- வீடியோ

  • 7 years ago
திரைக்கதை திலகம் பாக்யராஜ் ஒருமுறை சொன்னார் 'நான் ஏதோ ஆர்வத்துல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு டைட்டில்ல போட ஆரம்பிச்சேன். பின்னாடி வந்தவங்கள்லாம் அதை எடுத்துகிட்டு தானே எல்லாத்தையும் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்காங்க... அது தப்பு. ரைட்டரை பக்கத்துல வெச்சுக்கறது தான் நல்லது,' என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார். நல்ல எழுத்தாளர்களை அருகில் வைத்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி அதனை இயக்கிய வரையிலும் வெற்றிபெற்ற இயக்குநர்கள் தானே இறங்கி தோற்றுப்போய் தவிக்கிறார்கள். மணிரத்னம், ஷங்கர் இருவரின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா. சுஜாதா மறைவிற்கு பிறகு நாவல், பத்திரிகை, சினிமா என எல்லா தளங்களிலுமே வெற்றிடம் ஏற்பட்டது. மணிரத்னமும் ஷங்கரும் இன்னும் தடுமாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'வேலைக்காரன்' பட வேலைகளில் பிஸியாக உள்ளார். 'வேலைக்காரன்' படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் குறிவைத்து வெளிவரவுள்ளதால் இறுதிகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன் 'இவ்வளவு பெரிய ஆதரவு தந்த அன்பான சகோதர சகோதரிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி' எனக் கூறியுள்ளார்.

A small request to young and new directors. Please use the writers for making new scripts. Sivakarthikeyan crossed the milestone of 4 million followers on Twitter. Thanks to this, Sivakarthikeyan said, Big hug and loads of love to all my brothers, sisters and well wishers for your huge support'.

Recommended