விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ

  • 6 years ago
நடிகர் விவேக்கிற்கு தண்ணிய கண்டம் என்றால், ஜெயா டிவி சி.இ.ஓ விவேக்கிற்கு பணத்தால் கண்டம் வந்துள்ளது. ஜெயலலிதா வீட்டு உப்பை சாப்பிட்ட அனைவரும் இப்போது தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சசிகலா மூலம் போயஸ்கார்டனுக்குள் போய் அதிகாரம் செலுத்திய நடராஜன் திவாகரன், மகாதேவன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சுதாகரன், ராஜராஜன், குலோத்துங்கன், டாக்டர்.வெங்கடேஷ் என பலருமே இப்போது ரெய்டு வளையத்தில் சிக்கியுள்ளனர்.
இளவரசியின் மகன் விவேக் தலையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தனை கோடி சொத்துக்களை சேர்த்தது எப்படி என்று வருமான வரித்துறைக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவர் சேர்த்து வைத்த பணமே கண்டமாகி விட்டது.சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். மின் விபத்தில் உயிரிழக்கவே, தனது மகள்கள்,மகனோடு போயஸ்தோட்டத்தில் தஞ்சமடைந்தார் இளவரசி. அப்போது விவேக் சிறு குழந்தை. இதனால் ஜெயலலிதாவிற்கு விவேக் மீது பாசம் அதிகம்.பள்ளிப்படிப்பு முடிந்த உடன் ஆஸ்திரேலியாவில் படிப்பு, புனேயில் எம்பிஏ முடித்து விட்டு பெங்களூருவில் வேலை என அமைதியாகவே சென்றது விவேக்கின் வாழ்க்கை. ஐடிசி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணி செய்த விவேக், 2014ஆம் ஆண்டு அங்கிருந்து விலகினார்.

Ilavarasi's son Vivek is facing a severe crisis from IT department after the series of raids.

Recommended