அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

  • 7 years ago
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுமிகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரைச் சேர்ந்த 2 சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மழையால் அறுந்துக்கிடந்த மின்கம்பியை அவர்கள் தெரியாமல் மிதித்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த சிறுமிகள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான சிறுமிகளில் ஒருவரின் பெயர் யுவஸ்ரீ மற்றொருவர் பாவனா என தெரியவந்துள்ளது. இருவரும் சகோதரிகள் ஆவர். இரண்டு குழந்தைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்து புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Two girls de@d by electricity @ttack in Kodungaiyur Chennai. Two girls unknowingly trampled the electric wire front of the house.

Recommended