ஓவியாவை அடுத்து ஜூலியின் குட்டை உடைத்த ஹரிஷ் கல்யாண்- வீடியோ

  • 7 years ago
ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்ற பெயர் போய் போலி என்ற பெயர் வாங்கிவிட்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஜூலி பொய் பேசி கமல் ஹாஸனிடமே சிக்கினார். ஜூலி என்னுடன் அடிக்கடி போனில் எல்லாம் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஒரேயொரு முறை தான் பேசினார். அவர் பொய் சொல்கிறார் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். நான் ஓவியாவுடன் நட்பாகி விட்டேன். அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறேன் என்று முன்பு ஜூலி தெரிவித்தார். தான் யாருடனும் போனில் பேசவில்லை என்று ஒரேபோடாக போட்டார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் எங்கு சென்றாலும் ஒரே கூட்டம் கூடி விடுகிறது என்று முன்பு ஜூலி தெரிவித்தார். இதையடுத்து அவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இது தான் கூட்டமா ஜூலி என்று கேட்டு மீம்ஸ் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

After Oviya, Harish Kalyan exposes fellow former Bigg Boss contestant Juliana's lies.

Recommended