இணையதளத்தில் வாழ்வை தொலைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
(தினம் ஒரு தகவல்)
இணையதள பயன்பாடு என்பது இந்த காலத்தில் இன்றியமையாததாக ஆகிவிட்டது. அதை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.
பொய்யான ஐடிக்களை உருவாக்குதல், ஆணாக இருக்கக்கூடியவர் பெண் போல நடித்து பெண்களிடம் உரையாடுதல்... பெண்ணாக இருக்கக்கூடிவர் ஆணாக நடித்து ஏமாற்றுதல் என்று அனைத்து பொய், பித்தலாட்டமாகத்தான் உள்ளது. வீணான காரியங்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை இணையதளத்தில் தொலைத்து இதனால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகி நிற்கின்றனர்.
இப்படி பொய்யான ஐடிக்களை உருவாக்கிய மாமனார் ஒருவர் தான் இணையதலம் மூலமாக கள்ளக்காதல் கொண்டது தனது மருமகளிடம்தான் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுபோல நடக்கும் நிகழ்வுகள் ஏராளம்...ஏராளம்..
இதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன என்பதை விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்